ஆஹா! இன்று என்னவாயிற்று இவருக்கு?
என்றும் இவர் கவிதை படைத்து கலக்குவாரே;
இன்றென்ன கவிதை வரவில்லையா
என்றெண்ணுவார் சிலர்.
விடுவேனா வாய்ப்பை? வந்துவிட்டேன் இதோ-தொடங்கலாமா?
நெடுநேரம் எடுக்க மாட்டேன் நின்று சிலமட்டும் சொல்வேன்.
நெடுநேரம் எடுக்க மாட்டேன் நின்று சிலமட்டும் சொல்வேன்.
தொடங்குங்கள் என்றால் தொடுப்பேன் சிலசொற்கள்
படம் காட்ட வேண்டாம் என்றால் படியியிறங்கி கீழே வருவேன்.
சொல்லுங்கள் உங்கள் பதில் என்ன? – அன்புச்
செல்லங்களே கவிதை தொடுக்கவா அல்லது முடிக்கவா?
நன்றி உங்கள் அன்புக்கு நாவார வாழ்த்திடுவேன்.
சித்திரைத்
திங்களில் இந்த
சிங்கார கலையரங்கில்
பத்தரை
மாற்றுத் தங்கமாய்ப் பளிச்சிடும் புன்னகை
எத்தனை
எத்தனை இங்கென்று
எண்ணி வியக்கின்றேன்.
அப்படியென்ன
காரணம் என்றால்
உண்மைக் காரணம்
தப்பாமல் நானறிவேன்
நீரறிவீர் என்ற
குரல் ஒளிக்கும்.
நமது கல்லூரி வரலாறு படைக்கக் கண்டோம்
நான்காண்டுப்
பயிற்சி நன்முறையில் முடித்து
கூண்டோடு
பலரின்று பணியில் சேர்ந்தது உண்மை –இது
முதலிரண்டு
தொகுதிச் செவிலியர் பெற்ற பேறு!
இதிலென்ன
பெருமையென எளிதாக எண்ண வேண்டாம்.
தேர்ச்சி பெற்ற இரு தொகுப்பும் நூற்றுக்கு நூறு வெற்றி.
ஆனாலும் ஒரு குறை; அது
யார் பிழையோ!
போனால்
போகட்டுமென மனம் சாந்தி கொள்ளவில்லை.
ஒரு
சிறு குறைதான்; பெரிது படுத்தவில்லை –ஆனாலும்
வரும்
சிந்தனையில் இடையிடையே நினைவுகள் மலர்கின்றன.
முதல் தொகுப்பில் முழுமையாய் தேர்ச்சி பெற்று
சதம் வென்ற மாணவியரை கவுரவிக்க வாய்ப்பில்லை-ஆனாலும்
இரண்டாம் தொகுப்பு மாணவியருக்கு இன்று முடிசூட்டு விழா;
பரிவோடு பட்டம் வழங்க முனைவர் ஜோஸ்பின் அம்மையார்.
பெருமை உமக்கா, எமக்கா, அல்லது அம்மையாருக்கா?
முழுநிலவின் பயணத்தில் இது இரண்டாம் பிறை - ஆனாலும்
பழுதேதும் இல்லாமல் பயிற்சி முடித்து இன்று பட்டம் பெறுவது
பெற்றோருக்குப் பெருமை; வளரும் இக்கல்லூரிக்குப் பெருமை;
வற்றாத வளநதியாய் பயிற்சி தந்த ஆசிரியருக்கும் பெருமை.
இதைவிட வேறென்ன வேண்டும்? இதுவன்றோ பிறவிப்பயன்!
பெற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்
சற்றே இங்கு உங்கள் கலைத்திறமை கூட்டி
இயல், இசை, நாடகமென எல்லாம் சேர்த்து
புயலாய்க் கிளம்பி கலக்கக் கண்டோம் –ஆனந்தக் கண்ணீரில்
கலங்கியது எங்கள் உள்ளம்! வளர்க உம் கலைத் திறமை!
முற்பகலில் நடந்த நம் குடும்ப விழாவில்
கற்றோர் முன்னால் அவையில் அசத்தப் போவது யாரென்றார்?
இப்போதுதான் அதற்கு ஒரு விடை கண்டேன் – தாளம்
தப்பாமல் அசத்தியது நீரென்றால் இதில் வியப்பில்லை
உண்மைதான் சொன்னேன் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்!
வெற்றிச் சின்னமாக பெற்ற பட்டத்தோடு சிட்டாய்ப் பறந்தாலும்
சற்றே நீவீர் பயின்ற கல்லூரியின் பெருமை பாடுங்கள்.
ஊழ்வினை வென்று உயர்வு காண்பீர்! வலிமை அடைவீர்!
வாழ்க வளமுடன்! அமைதி காத்த உள்ளங்களுக்கு நன்றி!
வாய்ப்பளித்த அனைவருக்கும் ஆயிரம் நன்றி. விடைதாரீர்!.
No comments:
Post a Comment