Sunday, September 25, 2016

ஆயிரம்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயலெழுத்து வந்துபுகல் என்ன நீதி?

25.9.2016-கவி அரங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
காலை எழுந்தவுடன் படிப்பு இது பாரதி கண்ட கனவு
மாலை முழுதும் விளையாட்டு இதுவும் கவிஞன் ஆசை.
மாலை தொடுத்து வரவேற்க விழைந்தேன் காணேன் அவனை
சோலை தென்றலாய் தவழும் தமிழ் அன்னையே வாழியநீ!
அவை அடக்கம்
அரங்கம் அதிர அடுக்குச் சொற்கள் கூட்டி கவிதொடுத்து
பரங்கித் தலையான் போற்றும் ஆங்கிலச் சொல் தடுத்து   
கரங்கள் உயர்த்தி கத்திமுனைச் சொற்களால் புத்தி புகட்டும்
குரங்குப் பிடியாய் கவியரங்கம் நடத்தும் தென்னவரே வணங்கிடுவேன்.

  ** ஆயிரம்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயலெழுத்து வந்துபுகல் என்ன நீதி?**
தமிழுக்கு அமுதென்று பேரென்றால் அந்த தமிழேநம் உயிரென்போம்  
அமிழ்தத்தில் பொங்கிவரும் தேனெனில் அந்த தேன்கூடும் நாம்தானே. 
குமிழுக்குள் ஒளிரும்மின் இழையெனில் அந்த இழைக்குள்ளும் நாமே
நிமிடத்தில் எழுகின்ற கவியெனில் அக்கவிதைக்கு நாம் கருவென்போம்.

இன்றிங்கு ஒன்றுசொல்ல ஓடிவந்தேன் ஒருகனம் சிந்தித்துப் பாருங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் உச்சரிப்பு தமிழில் உண்டு.
தொன்று தொட்டு வளர்ந்த தமிழ் தொல்காப்பியன் கண்டதமிழ்
சென்றவிட மெல்லாம் செருபகை வென்று வெற்றிவாகை சூடும்தமிழ்.

ஆயிரம் உச்சரிப்பு மாறினும் தமிழில் தடுமாற்றம் இல்லை
பாயிரம் தந்தாலும் பங்கெடுக்க பிறமொழிபுக இடமில்லை இங்கு.
தாயிடம் மடிதவழ எமக்கு மட்டுமே இடமுண்டு யாரேதும்  
ஆயிரம்தான் சொன்னாலும் தமிழில் அயலெழுத்து வந்துபுகல் என்னநீதி?

அயல்மொழி ஆதிக்கம் கண்டு ஆத்திரம் கொள்ள வேண்டாம்
கயல்விழி பார்வையால் நம்தமிழை நாளும் காத்திடுவோம்.
வயல்வெளி தென்றலில் தமிழ்க் கவிதைகள் பல படைப்போம்
இயலிசை நாடகமென எதிலும் திகழும் தமிழுக்கு இணையில்லை.

பிறமொழி சொல்லும் ஒலியும் நம்மை அழித்திட அனுமதியோம்
அறவழி நம்வழி அவ்வழி என்றும் தமிழைக் காக்கும்.
திறவாத கதவையும் திறமிகு கவிதையால் திறக்கச் செய்வோம்
இறவாத வரம்பெற்று என்றென்றும் சிறக்கக் காண்போம் தமிழை.  
இங்கனம்
முனைவர் இரா. வரதராசன்

Saturday, September 3, 2016

கொலவெறியாம் கொலவெறி

கொலவெறி பாடலொன்று வந்ததம்மா திரையுலகில்

கொள்ளை அடிப்பது கோழையெனப் பட்டதம்மா நிஜவாழ்வில்.

கொலவெறி இன்று பாடலோடு நில்லாமல் சோதிக்கவும் துணிந்ததால்

இனவெறி மதவெறி இவ்விரண்டும் தோற்கக் கண்டோம் தோழா.

ஏனிந்த சோக கீதம்?

ஏனிப்படியோர் சோக கீதம்? – வாழ்வில்
ஏணிப்படிகள் எத்தனையோ உண்டு எட்டிப் பிடிக்க.
நாணிக் குறுகி நம்பிக்கை இழந்து – கரை கடக்க 
தோணி துணை மறந்து தொய்வடைய வேண்டாமே.
நாலு பேருக்கு நல்லது கெட்டது கணித்து
நல்வழி கூறும் சோதிடக்கலை கைவசம் இருக்க
கலங்கிடலாமோ ‘கைப்புள்ளபோலெண்ணி மயங்கிடலாமோ?

கணவனை இழந்து தவிக்கும் கற்புக்கரசிக்கு ஆறுதலாய் ஒரு கவி

சுந்தரனைத் தேடி தனியாய்
இந்திர சபை நாடிப் பறந்து
மந்திர மொழி பேசி மயக்கிடுமோர்
தந்திர வலை வீசி தர்க்கம் செய்ய
வந்துள்ள சத்தியவான் சாவித்திரியே!
பிரிந்து சென்றவன் சென்றவன்தான் - ஆனாலும்
திரும்பி வருவான் இனியொருநாள்.
அது இப்பிறவி அல்ல; பின்னொரு பிறவியில்
பிரிந்த உன்னைத் தானே தேடி வருவான்.
அதுவரை பொறு மனமே
அருகில் உருண்டு வரும் அந்நாளும்.
நீ தேம்பி அழும் ஓசை கேட்டு
எங்கோ உனைத் தேடி அலைகிறான் – உன்
தங்கக் கொலுசொலி கேட்டொருநாள் மீண்டு வருவான்.  

மாமதுரை கவிஞர் பேரவை கவிதைகள்

தலைவர்: கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன்
                       10-ம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர்நகர்
                       பழங்காநத்தம், மதுரை-625003
                       செல்:  98421 81462
அரங்கம்: மணியம்மை மழழையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை-1
28.8.2016 - கவி அரங்கம் (1)  
தலைப்பு:  தமிழ்காக்கும் தகுந்தவழி
அவையடக்கம்
அரங்கத்தை அலங்கரிக்கும் கவிமணி தென்னவரே!
அருகினில் அமர்ந்திருக்கும் அருங்கவியார் சக்தியாரே!
அவையினில் கவிச்சுவை கூட்ட குவிந்துள்ள கவிஞர்களே!
அடிபணிந்தோர் கவிபடைத்தேன் அன்புடன் ஏற்பீரே!

தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்நம் தாயாகி நாமவள் சேயானோம் - எனக்கவள்
அமிழ்தம் ஊட்டினாள் அறிவைக் கூட்டினாள்.
குமிழியாய் நீந்திவரும் அன்னைக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்.
அவள்தன் புகழ்பாட கவிவரி சில தொடுத்தேன் கேளீர்.

கங்கையவள் நாயகன் கரியதோர் நீள்சடையான்
சங்கரனை வென்றிடவோர் நக்கீரனை எமக்களித்தாய். 
சங்கப்பலகை வெல்லும் துணிச்சலும் எமக்களித்தாய் வாழியநீ.

மங்களம் பாடநான் வரவில்லை வாழ்த்துகிறேன் வாழியநீ.

தமிழ்காக்கும் தகுந்தவழி
தமிழ்காக்கும் தகுந்தவழி என்னவென என்றெண்ணிப் பார்த்தேன்
அமிழ்தொத்த தலைப்புக்கு விடைதேடி அலைந்து ஓய்ந்தேன்.
உமிக்குள் ஒளிந்திருக்கும் நெல்லரிசி மணிக்கொப்ப
தமிழன்னை தன்னுள் ஒளித்து மறைத்த மந்திரம் தேடினேன்.

தமிழா!
வள்ளுவனையும் கம்பனையும் அரசியலில் கலந்தாய்நீ
தெள்ளுதமிழ் காத்திட என்ன செய்தாய் தமிழா?–விளம்பரமாய்
நம்மொழி செம்மொழியென வாய்கிழியப் பேசி - நாளும்
செம்மொழி காக்கநீ என்ன செய்தாய் சிந்தித்துப்பார் தமிழா.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி
செருக்குடன் பிறமொழிக்கு தடம்புரளும் மோகம் வேண்டாம்
தருக்கம் வேண்டாம் தமிழ்மணம் குறைக்கவும் வேண்டாம்
நெருக்கம் கூட்டி நேர்மையுடன் தமிழ்காக்க சூழுரைப்பீர்.

உண்மைத் தமிழனாய் தமிழில் மட்டுமே பேசலாம்
கண்ணிமைக்கு கருமைதீட்டி பெண்மைக்கு அழகூட்டும்
வண்ணம்போல் எளியநடை கவிதைகள் படைக்கலாம்
எண்ணிப்பார் தனித்தமிழ் பேச்சும் கவியும் தமிழ்காக்கும்.

கலப்புமொழி பேசியினி கன்னித்தமிழை மறக்க வேண்டாம்
குழப்புமொழி களமேற்றி குறுநடை தொடர வேண்டாம்
பிழைப்புக்காகப் பிழைமறைத்து பித்தனாய் அலைய வேண்டாம்
அழைப்பிதழ் இருந்தாலும் அன்னியமொழி போற்ற வேண்டாம்.

தமிழனாய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்
தமிழால் நான்வாழ்வேன் தமிழுக்காகவே வாழ்வேனென   
நாளும்நாம் நற்றமிழ்சொற் சுவைகள்பல பெருக்க வாரீர்     
தோளுயர்த்தி தொன்மைமொழி காப்போம் வாரீர்.
                                                           * * *
                 25.9.2016 - கவி அரங்கம் (2) 
ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயலெழுத்து வந்துபுகல் என்ன நீதி?
தமிழ்த்தாய் வாழ்த்து
காலை எழுந்தவுடன் படிப்பு இது பாரதி கண்ட கனவு
மாலை முழுதும் விளையாட்டு இதுவும் கவிஞன் ஆசை.
மாலை தொடுத்து வரவேற்க விழைந்தேன் காணேன் அவனை
சோலை தென்றலாய் தவழும் தமிழ் அன்னையே வாழியநீ!
அவை அடக்கம்
அரங்கம் அதிர அடுக்குச் சொற்கள் கூட்டி கவிதொடுத்து
பரங்கித் தலையான் போற்றும் ஆங்கிலச் சொல் தடுத்து   
கரங்கள் உயர்த்தி கத்திமுனைச் சொற்களால் புத்தி புகட்டும்
குரங்குப் பிடியாய் கவியரங்கம் நடத்தும் தென்னவரே வணங்கிடுவேன்.

  ** ஆயிரம்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயலெழுத்து வந்துபுகல் என்ன நீதி?**
தமிழுக்கு அமுதென்று பேரென்றால் அந்த தமிழேநம் உயிரென்போம்  
அமிழ்தத்தில் பொங்கிவரும் தேனெனில் அந்த தேன்கூடும் நாம்தானே. 
குமிழுக்குள் ஒளிரும்மின் இழையெனில் அந்த இழைக்குள்ளும் நாமே
நிமிடத்தில் எழுகின்ற கவியெனில் அக்கவிதைக்கு நாம் கருவென்போம்.

இன்றிங்கு ஒன்றுசொல்ல ஓடிவந்தேன் ஒருகனம் சிந்தித்துப் பாருங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் உச்சரிப்பு தமிழில் உண்டு.
தொன்று தொட்டு வளர்ந்த தமிழ் தொல்காப்பியன் கண்டதமிழ்
சென்றவிட மெல்லாம் செருபகை வென்று வெற்றிவாகை சூடும்தமிழ்.

ஆயிரம் உச்சரிப்பு மாறினும் தமிழில் தடுமாற்றம் இல்லை
பாயிரம் தந்தாலும் பங்கெடுக்க பிறமொழிபுக இடமில்லை இங்கு.
தாயிடம் மடிதவழ எமக்கு மட்டுமே இடமுண்டு யாரேதும்  
ஆயிரம்தான் சொன்னாலும் தமிழில் அயலெழுத்து வந்துபுகல் என்னநீதி?

அயல்மொழி ஆதிக்கம் கண்டு ஆத்திரம் கொள்ள வேண்டாம்
கயல்விழி பார்வையால் நம்தமிழை நாளும் காத்திடுவோம்.
வயல்வெளி தென்றலில் தமிழ்க் கவிதைகள் பல படைப்போம்
இயலிசை நாடகமென எதிலும் திகழும் தமிழுக்கு இணையில்லை.

பிறமொழி சொல்லும் ஒலியும் நம்மை அழித்திட அனுமதியோம்
அறவழி நம்வழி அவ்வழி என்றும் தமிழைக் காக்கும்.
திறவாத கதவையும் திறமிகு கவிதையால் திறக்கச் செய்வோம்
இறவாத வரம்பெற்று என்றென்றும் சிறக்கக் காண்போம் தமிழை